பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2015

கோத்தபாயா கைதாவாரா?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைது செய்யப்படலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் மூலம், சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பாரிய அளவிலான ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக  ஜனாதிபதியினால் நியமக்கப்பட்ட ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன, சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனத்திற்கு 3473 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் சட்டரீதியாக 89 துப்பாகிகள் மாத்திரமே சட்டரீதியான அனுமதியுடன் வழங்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

எனவே குறித்த ஆயுத பரிமாற்றம் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.