பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2015

மலையக மக்கள் முன்னணியின் புதிய தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் .




இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது, கட்சியின் தலைவராக இதுவரை காலமும் செயற்பட்டு வந்த சாந்தினி சந்திரசேகரன் அதிரடியாக நீக்கப்பட்டு, கட்சியில் இதுவரை காலமும் அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்டு வந்த இராதாகிருஷ்ணன் தலைவராகியுள்ளார்.

மலையக மக்கள் முன்னணிக்குள் கடந்த காலங்களில் பல உட்பூசல்கள் நிலவிவந்த அதேவேளை, சாந்தினி சந்திரசேகரன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கே தமது ஆதரவை வழங்கி வந்தார்.

எனினும், முன்னணியின் ஒரு குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.