பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2015

மன்னாரில் உணவகம் மற்றும் இராணுவ முகாம்களில் உள்ள மலசல கூடங்களில் பரிசோதனை


மன்னார் பிரதான பாலத்தடி கடற்கரைப் பகுதியில் அதிகளவான மனிதக் கழிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை காலை கலக்கப்பட்டமை குறித்து மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று காலை திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
மன்னார் நகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் வடிகான் மன்னார் பிரதான பாலத்தடி கடற்கரைப்பகுதியை சென்றடைகின்றது.
கழிவு நீர் கடற்கரையை சென்றடையும் வகையிலே குறித்த கழிவு நீர் வடிகான் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த கழிவு நீர் வடிகானில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் உள்ள மலசல கூட கழிவுகலே குறித்த கழிவு நீர் வாய்க்காலில் கலக்கவிடப்பட்டுள்ளதாக மக்கள் விசனம்
இந்த நிலையில் இன்று மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட்,மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட்,நகர சபை பணியாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் குறித்த கழிவு நீர் வடிகால் பகுதிக்குச் சென்று பார்வையிட்டதோடு அருகில் இருந்த இராணுவ முகாமுக்குள் சென்று அங்குள்ள மலசல கூடங்களை பார்வையிட்டனர். 
இதன்போது குறித்த மலசல கூட பகுதியில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்ட நிலையில் உடனடியாக குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு அங்கு பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து கழிவு நீர் வாய்க்கால் சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டு கழிவுகள் வெளியேற்றப்பட்ட நிலையில் பஸார் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் உள்ள மலசல கூடங்கள் பரிசோதனை செய்யப்பட்டதோடு,
மலசல கூட கழிவுகள் மன்னார் நகர சபையூடாக வெளியேற்றப்டுகின்றதா? அல்லது தனிப்பட்ட முறையில் கழிவுகள் அகற்றப்படுகின்றதா? என மன்னார் நகர சபை ஆராய்ந்து வருகின்றனர்.