பக்கங்கள்

பக்கங்கள்

30 செப்., 2015

ஜெனீவாவில் இலங்கை பா.உறுப்பினர்களை சந்தித்த இந்திய பா.உறுப்பினர்


இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் சயந்தன் ஆகியோர் இந்திய பாராளுமன்ற உறுப்பினரான அன்புமணி இராமதாஸ் அவர்களோடு கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
ஜெனீவாவில் இன்று வெளிவரவிருக்கும் அமெரிக்க திட்ட வரைபு தொடர்பில் இந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி இராமதாஸ் இச்சந்திப்பில்,
ஈழத் தமிழருக்கான பாரதத்திலும் ஐ.நா சபையிலும் தம்மால் முடிந்தவரையிலான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்திருந்தார்.
இக் கலந்துரையாடலில் பசுமை தாயகக் கட்சி இயக்குனர் அருள், பாட்டாளி மக்கள் கட்சி செய்தி தொடர்பாளரும் பசுமைக் கட்சியின் சட்ட ஆலோசகருமான பாலு, மற்றும் பெங்களூர் பல்கலைக்கழக மனிடக் உரிமை தொடர்பிலான பேராசிரியர் போல் நியூமன் மற்றும் சுகிந்தன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.