பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2015

கிழக்கு மாகாண சபையின் இரண்டு உறுப்பினர்கள் கட்சி தாவல்



கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் இரண்டு பேர் ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ளனர்.
கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று நடைபெற்றபோது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏ.எம்.எல். அமீர் மற்றும் கே. புஷ்பகுமார ஆகிய இருவருமே இவ்வாறு கட்சி தாவியுள்ளனர். எதிர்க்கட்சியில் இருப்பதை விட ஆளுங்கட்சி மூலமாக மக்களுக்குச் சேவையாற்றவே தாங்கள் கட்சிதாவியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். .
மாகாண சபை அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிய தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி, ஆளுங்கட்சி வரிசையில் குறித்த மாகாண சபை இருவருக்கும் தற்காலிக அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்கிக்கொடுத்துள்ளார்.
எதிர்வரும் மாகாண சபை அமர்வின்போது அவர்களுக்கு மூப்பு அடிப்படையில் ஆசனம் ஒதுக்கித் தரப்படும் என்றும் தவிசாளர் உறுதியளித்துள்ளார்.