பக்கங்கள்

பக்கங்கள்

30 செப்., 2015

யாழ்ப்பாணத்து இளைஞர்களின் பெற்றோருக்கு வூட்லர் எச்சரிக்கை


இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் தொடர்பில அவர்களது பெற்றோர் அக்கறையாக இருக்குமாறு யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எவ்.யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் பெருகிவரும் வன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த நாம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றோம்.
இதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் யாழ் கொக்குவில் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்களை நாம் கைது செய்துள்ளோம்.
அவர்களை விசாரித்தில் அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களென தெரிய வந்துள்ளது,
குறித்த நபர்கள் வாள், கத்தி உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களையும் தம்வசம் வைத்திருந்துள்ளனர்,
எனவே நாம் குறிப்பிட்ட ஐவரையும் கைது செய்து தற்போது விசாரணைக்குட்படுத்தியுள்ளோம்.
எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறு நகர் பகுதிகளில் தேவையற்ற விதத்திலும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்திலும் நடமாடுபவர்கள் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்தவுள்ளோம்.
எனவே இளைஞர்களின் பெற்றோர்கள் உங்களது பிள்ளைகளின் நடவடிக்கள் தொடர்பில் இனிவரும் காலங்களில் அக்கறையுடன் செயற்படுங்கள், வீதிகளில் அவர்கள் தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்களானால் எந்தவித பாரபட்சமும் இன்றி அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.