பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2015

சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் கலப்பு நீதிமன்ற விசாரணை வேண்டும்


இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் கலப்பு நீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை தொடர்பிலான ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் நிபுணர்களை உள்ளடக்கிய அந்த குழு போரினால் பாதிக்கப்பட்டவர்களை உரியமுறையில் விசாரிக்க வேண்டும்.

மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளவைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசை சர்வதேச சமூகம் அழுத்தம் தரவேண்டும் என  மனித உரிமை ஆர்வலர்கள் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்