பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2015

தமது குடும்பத்தை கவனிக்கவில்லை! ஜேவிபி பொய் கூறுகிறது!- சித்திராங்கனி


தமது குடும்ப நலன்களை பாதுகாத்ததாக ஜேவிபி கூறுவதை, ஜேவிபியின் காலஞ்சென்ற முன்னாள் தலைவர் ரோஹன விஜேவீரவின் மனைவி நிராகரித்துள்ளார். 
கடந்த 26 வருடங்களாக அந்த தமது குடும்ப நலன்களை கவனிக்கவில்லை என்றும் சித்திராங்கனி விஜேவீர தெரிவித்துள்ளார்.
ரோஹன விஜேயவீர இறந்த பின்னர் அவரின் குடும்ப நலனுக்காக ஒருகோடி ரூபா ஒதுக்கப்பட்டதாக முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருந்தார். எனினும் இதனை சித்திராங்கனி மறுத்துள்ளார்.
இதுவரை காலமும் வெலிசறையில் உள்ள கடற்படை விடுதியில் தங்கவைக்கப்பட்டிந்த ரோஹன விஜேவீரவின் குடும்பத்தினரை எதிர்வரும் முதலாம் திகதிக்குள் வெளியேறுமாறு கடற்படை உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்தே தற்போது இந்த செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் இதுவரை காலமும் தாம் எதுவும் பேசவில்லை. இனி கட்டாயம் தாம் வாய் திறக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சித்திராங்கனி குறிப்பிட்டுள்ளார்.
தமது குடும்பத்தினரை வெளிநாட்டுக்கு செல்ல ஒழுங்கு செய்து தருமாறு கோரிய போது டில்வின் சில்வா, நிஹால் கலப்பதி மற்றும் சோமவன்ச அமரசிங்க ஆகியோர் அதனை நிராகரித்து விட்டதாக சித்திராங்கனி சுட்டிக்காட்டியுள்ளார்.
1989ம் ஆண்டு விஜேவீர கொல்லப்பட்ட பின்னர் சித்திராங்கனியும் 6 பிள்ளைகளும் திருகோணமலை கடற்படை விடுதியிலும் பின்னர் வெலிசறையிலும் பாதுகாப்பின் நிமித்தம் தங்கவைக்கப்பட்டிருந்தனர்