பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2015

சன் குழுமத்துக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி



 சன் குழுமத்திற்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 எஃப்.எம் ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் அமர்வில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவி ட்டுள்ளது. கிரிமினல் வழக்கு இருப்பதாலேயே ஏலத்தில் பங்கேற்க அனுமதி மறுப்பது நியாயமில்லை என உயர்நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.  

மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, சசிதரன் அடங்கிய அமர்வு, ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்திற்கு நீதிபதி சத்தியநாராயணன் அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பு செல்லும் என தற்போது உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.