பக்கங்கள்

பக்கங்கள்

30 செப்., 2015

ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட தயாராகவுள்ளோம்!- இலங்கை பிரதிநிதி


இந்நிலையில் போர்க்குற்றம் குறித்த ஐ.நா.-வின் அறிக்கை மீது இன்று பொதுவிவாதம் நடைபெற்றது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற விதிமுறை மீறல்கள், போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணை குழு, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தனது அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது.
அதில், போர்க்குற்றம் குறித்து வெளிநாட்டு, உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருந்தது. ஆனால், இலங்கை அரசோ, உள்நாட்டு விசாரணைதான் நடத்துவோம் என்று கூறிவிட்டது.
இந்நிலையில் போர்க்குற்றம் குறித்த ஐ.நா.-வின் அறிக்கை மீது இன்று பொதுவிவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பேசிய ஐ.நா.வுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, “அனைத்து மக்களும் சம உரிமையுடன் இணைந்து வாழ நடவடிக்கை எடுக்க ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். மேலும் இந்த விஷயத்தில் சர்வதேச நாடுகளின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் மற்றும் உதவிகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.