தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் இணைய வசதி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். |
சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் வாசித்த அறிக்கையில் கூறியதாவது,
தகவல் தொழில்நுட்பத்துறையில் துறையில் தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு பைபர் நெட்வொர்க் கார்ப்பரேசன் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.
கிராமங்களில் இல்லம்தோறும் இணைய தொடர்பு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். மேலும் 12, 524 ஊராட்சி கிராமங்கள் இணையம் மூலம் இணைக்கப்படும்.
அரசு சேவைகளை இணையம் மூலம் பெற முடியும் . இதற்கென ஆப்டிகல் பைபர், கிராமங்களில் பதிக்கப்படும்.
மத்திய அரசு உதவியுடன் 3 ஆயிரம் கோடி செலவில்,இத்திட்டத்தை மாநில அரசு நிறைவேற்றும் மேலும் இணையதள வழி டிவி கொண்டு வரப்படும்.
இ - சேவை மையங்கள் வழியாக அரசு உதவி பெறும் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 10 034 இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 70 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
மேலும் இணையம் மூலம் கூடுதலாக 300 சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். |
|