பக்கங்கள்

பக்கங்கள்

6 செப்., 2015

சானியா - ஹிங்கிஸ் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி



அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா - ஹிங்கிஸ் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 2ஆம் சுற்றில் சியா ஜங் - திமா பேச்சின்கி இணையை  6-1, 6-1 என்ற செட்டில் வென்றது. 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் 4ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 3வது சுற்றில் 6-3, 6-4, 6-4 என்ற செட்டில் ஜெர்மனியின் கோல்ஸ்கிரைபரை வென்றார். 

இதேபோல் சுவிஸின் வாவ்ரிங்கா, செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் ஆகியோரும் 4ஆம் சுற்றுக்கு முன்னேறினர்.