பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2015

ஜெனீவாவில் அமெரிக்க யோசனை திருத்திக்கொள்ள இலங்கை முயற்சிசுவிட்ஸர்லாந்து, நோர்வே, அயர்லாந்து, கனடா கடும் எதிர்ப்பு


இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் அமைக்கப்படவுள்ள ஹைபிரைட் நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்களின்
பங்கேற்றலை தடுக்க இலங்கை பிரதிநிதிகள் நேற்று ஜெனீவாவில் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர்.
இந்த நீதிமன்றத்தில் வெளிநாடுகளின் நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள் மற்றும் சட்டத்தரணிகள் பங்கேற்கவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்திருந்தார்.
இந்தநிலையில் உள்நாட்டு பொறிமுறையை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் குறித்த வெளிநாடுகளின் தலையீடுகளை தவிர்க்கும் முயற்சியிலேயே இலங்கை நேற்று ஈடுபட்டது.
இதேவேளை நாளை அமெரிக்கா முன்வைக்கப் போவதாக கூறப்படும் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயம், ஊடகவியலாளர் மீது தாக்குதல், மதத்தலங்களின் மீது தாக்குதல், பாலியல் வன்முறை, காணி மீளவழங்கல், இராணுவ சூன்யம் போன்ற 14 விடயங்களையும் அகற்றுமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் ஹைபிரைட் நீதிமன்றத்தில் சர்வதேச நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரை தவிர்க்குமாறு இலங்கை கோரியமையை சுவிட்ஸர்லாந்து, நோர்வே, அயர்லாந்து, கனடா போன்ற நாடுகள் கடுமையாக எதிர்த்தன.
இந்தநிலையில் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை தீவிரமாக செயற்பட்ட விடயங்களில் இலகு மாற்றங்கள், தமது யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் யோசனை திருத்தப்பிரச்சினையில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உரிய ஆலோசனைகள் கிடைக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் சார்பில் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, இது தொடர்பான உத்தியோகப்பற்றற்ற சந்திப்புக்களில் நேற்று பங்கேற்றார்.