பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2015

மதிமுகவிலிருந்து இரா.சங்கர், து.முருகன் தற்காலிக நீக்கம்



மதிமுக தலைமைக்கழகம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ  விடுத்துள்ள அறிவிப்பில்,  ‘’ திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகரக் கழகச்செயலாளர் இரா.சங்கர் மற்றும் துணைச்செயலாளர் து.முருகன் ஆகிய இருவரும் அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமைக்கு அவர்கள் தெரிவிக்கும் விளக்கம் தலைமைக் கழகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையாவிடில் இருவரும் பொறுப்புக்களிலிருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.