பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2015

யாழ். மாவட்டப் பாடசாலைகளின் கிரிக்கெட் சங்கம் ... 13 வயது..ஆட்டம் சமநிலை

யாழ். மாவட்டப் பாடசாலைகளின் கிரிக்கெட் சங்கம் யாழ். மாவட்டப் பாடசாலைகளின் 13 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கிடையே
நடத்தி வரும் துடுப்பாட்டத் தொடரில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியும் மோதிய ஆட்டம் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி அனைத்து இலக்குகளையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக ஜதுசன் 58 ஓட்டங்களையும் ஜான்சன் 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி சார்பில் அஜிவன், கெளசியன், டான்சன், டனிசியன் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி நிர்ணயிக்கப்பட்ட நாள் முடிவில் 6 இலக்குகளை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றது. அதிக பட்சமாக டனிசியன் 33 ஓட்டங்களையும் கெளசிகன் 17 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மகாஜனக் கல்லூரி சார்பில் சஜந்தன் 2 இலக்குகளையும் தனிஸ்டன், கிசாந்தன் இருவரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினார்கள்.