பக்கங்கள்

பக்கங்கள்

6 அக்., 2015

ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி, ஸ்ரான்லிக் கல்லூரி அணியை இன்னிங்ஸ் மற்றும் 138 ஓட்டங்களால் வெற்றி பெற்றது

3.jpg-22_01
யாழ். மாவட்டப் பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கம் 13வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவினருக்கிடையில் நடத்தும் துடுப்பாட்டத்
தொடரில் (டெஸ்ட்) நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி, ஸ்ரான்லிக் கல்லூரி அணியை இன்னிங்ஸ் மற்றும் 138 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரான்லிக் கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 27 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அதிக பட்சமாக விதுசன் 12 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஸ்ரான்லிக் கல்லூரி அணி சார்பில் றெக்சன், கஜதீபன் இருவரும் தலா 5 இலக்குகளை வீழ்த்தினர்.
முதலவது இன்னிங்சுக்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கத்தவரோதயக் கல்லூரி அணி 189-5 என்ற நிலையில் இருந்த பொழுது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண் டது. அதிகபட்சமாக றெக்சன் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை யும், தனு­ன் 50 ஓட்டங்களையும், விது­ன் 38, ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ரான்லிக் கல்லூரி அணி சார்பில் தனு­ன் 3 இலக்குகளை வீழ்த்தினார்.  இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஸ்ரான்லிக் கல்லூரி அணி 14 ஓட்டங்களில் சுருண்டது. பந்துவீச்சில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி சார்பில் பிரிந்தன் 4 இலக்குகளையும், கஜதீபன் 2 இலக்குகளையும், றெக்சன், கபிலதாஸ் இருவரும் தலா ஓர் இலக்கையும், வீழ்த்தினர்.