பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2015

சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்த 175 பேரை போலீஸார் அதிரடியாக கைது

சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்த 175 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 27-ல் மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் அஜய் பலியானதையடுத்து இந்த அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். சிறுவன் அஜய் உயிரிழந்த வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் புளியந்தோப்பு பகுதியில் 30 வருடமாக மாஞ்சா  நூல் தயாரித்த முருகன் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். முருகனின் கடையிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாஞ்சா நூல்களுக் கைப்பற்றப்பட்டுள்ளன. மாஞ்சா நூல் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.