பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2015

இந்தியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோனி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

இதனைத் தொடரந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 200 ரன்கள் இலக்கை 19.4 ஓவரில் எட்டியது. தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி 34 பந்தில் 68 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 1 - 0 என்ற முன்னிலையில் உள்ளது.