டெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் நில அதிர்வுகள் ஏற்பட்ட போது, அங்குள்ள சிண்டிகேட் வங்கியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு பீதியில் வெளியேறியுள்ளனர்.
அப்போது வங்கியில் கேஷியர் மட்டும் தனியாக இருந்த போது, துப்பாக்கிகளுடன் நுழைந்த 2 மர்ம நபர்கள், ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த விடயம் வெளியே நின்று கொண்டிருந்த ஊழியர்களுக்கு தெரிவதற்குள், கொள்ளையர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். தற்போது அந்த மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். |