பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2015

23 உள்ளுராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்படுகிறது


நாளை மறுநாளுடன் ஆயட்காலம் முடிவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலத்தை எதிர்வரும் டிசம்பர் 31வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த மாதம் 31ஆம் திகதி ஆயுட்காலத்தை நிறைவுசெய்யும் மேலும் இரண்டு உள்ளுராட்சி சபைகளினதும் நிர்வாக காலமும் டிசம்பர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக உள்ளுராட்சித்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வருட ஆரம்பத்தில் ஒருதடவையில் அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தலை நடத்தும் முகமாகவே இந்த காலநீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது