பக்கங்கள்

பக்கங்கள்

9 அக்., 2015

கோத்தபாயவிடம் 3 மணிநேரம் விசாரணை


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் நேற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டது.
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின்  ஊழியர்களை தேர்தல் கடமைகளுக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர் பில் நேற்றைய தினம் இந்த விசாரணைகள் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இடம்பெற்றன.
நேற்று காலை ஒன்பது மணிக்கு ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு கோத்தபாய ராஜபக்சவுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு ஆஜராகியிருந்தார்.
அவரிடம் நண்பகல் 12.00 மணி வரை சுமார் 3 மணி நேரம் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறினார்.