பக்கங்கள்

பக்கங்கள்

23 அக்., 2015

புத்தளத்தில் கோர விபத்து : நால்வர் பலி . 33பேர் படுகாயம்

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர்.   

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
வென்னப்புவ டிப்போவுக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த டிப்பருமே இவ்வாறு மோதிக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.