பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2015

கால்பந்து வீரர் ரொனால்டோ, தனது 500வது கோல் அடித்து அசத்தினார்




போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து அரங்கில் 500வது கோல் அடித்து அசத்தினார் சுவீடனில்,‘கிளப்’அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டி நடந்தது. இதில் ரியல் மாட்ரிட் அணி 2–0 என்ற கோல் கணக்கில் மால்மோ அணியை வீழ்த்தியது. ரியல் மாட்ரிட் அணி சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் (29, 90வது நிமிடம்) அடித்தார். 

இதன்மூலம் இவர், கால்பந்து அரங்கில் தனது 500வது கோல் அடித்தார். இதுவரை 753 போட்டியில் 501 கோல் அடித்துள்ளார். தவிர, ரியல் மாட்ரிட் அணி சார்பில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை ராலுடன் பகிர்ந்து கொண்டார் ரொனால்டோ. 

இவர்கள் இருவரும் ரியல் மாட்ரிட் அணிக்காக தலா 323 கோல் அடித்துள்ளனர். இதில் ரொனால்டோ 308 போட்டியிலும், ரால் 741 போட்டியிலும் இந்த இலக்கை எட்டினர்.