பக்கங்கள்

பக்கங்கள்

17 அக்., 2015

தமிழ்க் கைதிகளை 7-ம் தேதிக்குள் விடுவிக்க ஜனாதிபதி உறுதி: சம்பந்தன் /பி பி சி

தமிழ்க் கைதிகளை 7-ம் தேதிக்குள் விடுவிக்க ஜனாதிபதி உறுதி: சம்பந்தன்

  • 16 அக்டோபர் 2015
Image copyrightAFP
Image captionஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்
இலங்கையில் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ்க் கைதிகளில் கணிசமானவர்களை அடுத்த மாதம் 7-ம் திகதிக்குள் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.
நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுடன் இன்று காலை நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, நீதியமைச்சரும் தானும் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் முடிவில் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.