பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2015

அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் 8ஆவது ஆண்டு ..கலைமகள் ஏ, பாரதி அணிகள் அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதி

அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் 8ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு குறித்த கழகத்தினால் யாழ். மாவட்ட ரீதியாக
நடத்தப்பட்டு வரும் மின்னொளியிலான கரப்பந்தாட்டத் தொடரின் காலிறுதி ஆட்டங்களில் அச்சுவேலி கலைமகள் ஏ அணி, நாயன்மார் கட்டு பாரதி அணி என்பன வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டங்களுக்குத் தகுதி பெற்றன.
இந்தத்தொடரில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற காலிறுதியாட்டங்களில் முதலில் இடம் பெற்ற ஆட்டத்தில் புத்தூர் தமிழ்மதி அணியை எதிர்த்து அச்சுவேலி கலைமகள் “ஏ’ அணி மோதிக்கொண் டது. இதில் அச்சுவேலி கலைமகள் “ஏ’ அணி 2:1 என்ற செற்கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதியாட்டத்துக்குத் தகுதிபெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது காலிறுதியாட்டத்தில் அச்சுவேலி கலைமகள் “பி’ அணியை எதிர்த்து நாயன்மார்கட்டு பாரதி அணி மோதிக்கொண்டது. இதில் நாயன்மார்கட்டு பாரதி அணி 2:1 என்ற செற்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.