பக்கங்கள்

பக்கங்கள்

11 அக்., 2015

ரூ.900 கோடி வங்கிக்கடன் முறைகேடு; தொழிலதிபர் விஜய் மல்லையா வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை



கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதிபர் விஜய் மல்லையா ரூ.900 கோடி அளவிற்கு வங்கி கடன் மோசடி செய்திருப்பதாக சிபிஐ இன்று
சென்னை, கோவா, பெங்களூரு உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள அவரது வீடு மற்றும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தியது. 

தொழிலதிபர் விஜய் மல்லையா பல வங்கிகளில் அளவுக்கு அதிகமான கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் உள்ள நிலையில், ஐடிபிஐ வங்கி ரூ.900 கோடி அளவுக்கு மல்லையாவுக்கு விதிகளை மீறி கடன் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வங்கி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடந்த சி.பி.ஐ. சோதனையில் பல முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இவ்விவகாரம் தொடர்பாக, 2013-ல் மட்டும் பல்வேறு வங்கிகள் வராக்கடன் குறித்து அளித்துள்ள அறிக்கையின் கீழ் 27 வழக்குகளை பதிவு செய்துள்ளது சி.பி.ஐ. அதில் 17 வங்கிகளில் இருந்து கிங்பிஷர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடனின் மதிப்பு ரூ.7 ஆயிரம் கோடியாகும். குறிப்பாக, அதில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிகபட்சமாக ரூ.1,600 கோடியை கடனாக வழங்கியிருக்கிறது.