பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2015

நடைபாதை கடையில் பிள்ளைக்கு பரிசு பொருள் வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர


நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களை திறப்பு விழா அல்லது உத்தியோகபூர்வ பயணங்களின் போதே கடைவீதிகளில் காணமுடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நடைபாதை கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதை காண்பது மிகவும் அரிது.
எனினும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, நேற்று நடைப்பாதை கடையொன்றில் பொருட்களை கொள்வனவு செய்வதை காணமுடிந்தது.
இன்று உலக சிறுவர்கள் தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், அவரது பிள்ளைக்கு பரிசு பொருள் கொள்வனவு செய்ய சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு நடைப்பாதை கடைக்கு சென்றிருந்தார்.