பக்கங்கள்

பக்கங்கள்

17 அக்., 2015

மைத்திரி- ரணதுங்க சந்திப்பு


இந்த சந்திப்பானது, ஜனாதிபதிக்கு நெருங்கிய ஒருவரின் தலையீட்டிற்கு அமைய, கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ
இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் வரையில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த சந்திப்பில் எவ்வாறான விடயங்கள் குறித்து பேசப்பட்டது என்ற தகவல்கள் ஏதும் இதுவரையில் வெளியாகவில்லை.
இவர் மேல் மாகாண முதலமைச்சராக செயற்பட்ட காலத்தில் கொலொன்னாவை பகுதியில் வசித்த சட்டவிரோத குடியிருப்பாளர்களை வெளியேற்றுதற்காக இலஞ்சம் பெற்றுகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டதுடன், அது தெடர்பிலான அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் நிறைவடைந்து, குற்றவாளியை கைது செய்வது மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான ஒரு நிலைமையில் பிரசன்ன ரணதுங்கவிற்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களையும், எதிர்ப்பார்ப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.