பக்கங்கள்

பக்கங்கள்

23 அக்., 2015

இறுதிக்கட்ட போரின்போது புலிகள் மக்களை கொலை செய்தனர் என்பதில் உண்மையில்லை: சிவசக்தி ஆனந்தன்


இறுதிக்கட்ட போரின் இறுதி தருணங்களில் பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்தனர் என மக்ஸ்வல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இதில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இறுதி தருணங்களில் பொதுமக்கள் உயிரிழப்புக்களுக்கு புலிகளே பொறுப்பு என ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் பொய்யானது.
ஜெனீவா அறிக்கையின் ஊடாக நீதி கிடைக்கும் என எங்களது மக்கள் நம்புகின்றனர்.
நீதிமன்றக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை கொள்ள முடியாது.
கலப்பு நீதிமன்ற முறையை தமிழ் மக்கள் நிராகரிக்கவில்லை. அதன் ஊடாக நியாயம் கிடைக்கும் என்றால் அதனை அவர்கள் வரவேற்கின்றார்கள்.
லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இந்த முறைமை அமுல்படுத்தப்பட்டது.
கடந்த அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்திற்கும் இடையில் வேறுபாட்டை காண முடியவில்லை.
சர்வதேச நீதவான்கள் கலப்பு நீதிமன்றில் பங்கேற்பார்கள் என்பதனை அரசாங்கம் சிங்கள மக்களிடமிருந்து மூடி மறைப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு நியாயம் கிட்டும் என கருதிவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.