பக்கங்கள்

பக்கங்கள்

11 அக்., 2015

வேலூர் மத்திய சிறையில் நளினி –முருகன் சந்திப்பு


விடுதலையின்றி நீண்ட காலமாக சிறையில் வாடும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தம்பதிகளாக சிறையில் தவிக்கும் முருகன், நளினி இருவரும் சந்தித்துப் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991 ஆண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் மூலம் தமிழகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் முருகன், நளினி என்பவர்கள் தம்பதியினராவார்கள்.
கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து கொள்ளலாம் என கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதன்படி ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகன் இன்று காலை 7.30 மணிக்கு வேலூர் பொலிஸ் துணை சூப்பிரண்டு செல்வம் தலைமையிலான பொலஸாரின் பலத்த பாதுகாப்புடன் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மனைவி நளினியுடன் முருகன் அரைமணி நேரம் பேசினார். பின்னர் 8 மணியளவில் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலுக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அடைக்கப்பட்டார்.