பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2015

அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்: பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்


சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை அலரிமாளிகையில் விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேற்படி விசேட கூட்டத்தில் சிறைச்சாலைகள் அமைச்சர், சிறைச்சாலைகள் ஆணையாளர், சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துகொள்வர் என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விவரங்களையும்,
அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணங்களையும் தம்மிடம் சமர்ப்பிக்குமாறு சட்டாமா அதிபரிடம் பிரதமர் ரணில் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே நாளை திங்கள் கிழமை விசேட கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.