பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2015

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு! அமைச்சரவைப் பத்திரம் நிராகரிப்பு


தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அமைச்சரவையில் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் சமர்ப்பித்துள்ளார்.
அண்மையில் தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் எதிரொலியாக இந்த அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும் அவ்வாறு விடுதலை செய்வது மோசமான முன்னுதாரணங்களுக்கு வழிவகுத்துவிடும் என்று பல அமைச்சர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
எனினும் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்ட காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் கருணை அடிப்படையிலான விடுதலை குறித்து அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அமைச்சர் சுவாமிநாதனின் அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேற்கொண்டு வரும் முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சரவையின் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.