பக்கங்கள்

பக்கங்கள்

2 அக்., 2015

வைகோ கூட்டணியில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி விலகல்



ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய 6 கட்சிகளும் ஒருங்கிணைந்து ‘‘மக்கள் நல கூட்டணி’’யை உருவாக்கின.

இந்த கூட்டணி அ.தி. மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து சில கூட்டங்களிலும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மக்கள் நல கூட்டணியை தேர்தல் கூட்டணியாக மாற்ற தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் குற்றம் சாட்டினார். அதோடு அவர் மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  அதன் பிறகு அந்த கூட்டணி, 5 கட்சி கூட்டணி என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மனிதநேய மக்கள் கட்சியும் அந்த கூட்டணியில் இருந்து விலகியது. இதனால் 5 கட்சி கூட்டணி உடைந்தது.

இதுபற்றி மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், "மக்கள் பிரச்சனைக்காக ஒன்று சேர்ந்து போராடவே நாங்கள் கை கோர்த்தோம். மற்றபடி அது அரசியல் கூட்டணி அல்ல" என்றார்.