பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2015

எதிரணியினரை கமல்ஹாசன் தூண்டி விடுவதாக சரத்குமார் குற்றச்சாட்டு: விஷால் பதில்




தென்னிந்திய நடிகர் சங்கத்தை உடைக்க சதி நடப்பதாகவும், அதன் பின்னணியில் நடிகர் கமல்ஹாசன் இருப்பதாகவும் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, எதிர் அணியினரை சந்திக்க கமல் தூண்டி விடுகிறார். தலைவர் பதவிக்கு முன்மொழிகிறார் என்றால் நன்றி விசுவாசத்தோடு இருந்திருக்க வேண்டும். நன்றிக்காக நான் உழைத்தவன் அல்ல. என்னை கூப்பிட்டு பேசியிருக்கிறாரா. அவர் படத்தை வெளியிட 36 மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்த்திருக்கிறேன். உண்மைக்கு புறம்பாக என்ன செய்திருக்கிறோம். ஊழல் ஊழல் என்று சொல்கிறார்களே. என்ன ஊழல். எதிரணியினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரும் 11ஆம் தேதி கூட்டம் நடைபெறும். இதில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதில் அளிக்கப்படும் என்றார்.

தங்கள் அணியினரை கமல்ஹாசன் தூண்டி விடுவதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. தங்கள் அணிக்கு ஆதரவு மட்டுமே கமல் வழங்கியுள்ளார். ஜனநாயக வழிமுறையில் இது தவறாகாது. நடிகர் கமல் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளம். அவரை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விஷால் கூறியுள்ளார்.