பக்கங்கள்

பக்கங்கள்

10 அக்., 2015

மீண்டும் மண்ணை கவ்விய சென்னை அணி.


ஐ.எஸ்.எல். தொடரின் நேற்றைய லீக் போட்டியில் சென்னை 0–1 என்ற கோல் கணக்கில் டெல்லியிடம் வீழ்ந்தது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் 2வது சீசன் தற்போது நடக்கிறது. இதில் நேற்று டெல்லியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் மோதின.
தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய டெல்லி அணிக்கு 8வது நிமிடத்தில் ஆண்டர்சன் சிகாவோபனால்டி  கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் டெல்லி முன்னிலையில் இருந்தது.
2வது பாதியில் இரு அணிகளும் மாறி மாறி போட்டி போட்டன. ஆனால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. முடிவில் டெல்லி 1-0 என்று வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது 2வது தோல்வி ஆகும்