பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2015

இந்துவை திருடன் என்றார் கருணாநிதி.. இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்: எச். ராஜா குற்றச்சாட்டு

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இந்துக்களின் ஆதரவு நிலைப்பாட்டில் இரட்டை வேடம் போடுவதாக பா.ஜ.க.தேசியச் செயலர் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை திருச்சியில் அவர் அளித்த பேட்டியில், "உத்தரப்பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு அந்த மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். அதை விட்டுவிட்டு பாஜகவை குறைகூறுவது வேடிக்கையாக உள்ளது.
சர்வதேச அளவில் நமது நாட்டின் மதிப்பு உயர்ந்து வருகிறது. ஆனால் அதை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
2016ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தே சந்திப்போம்.
கூட்டணியிலிருந்து மதிமுக ஏற்கெனவே விலகிவிட்ட நிலையில், இருக்கிறோமா, இல்லையா என்பதை சில கட்சிகள் அறிவிக்க வேண்டியதுள்ளது. அதே நேரம் சில கட்சிகள் புதிதாக இணையவும் வாய்ப்புள்ளது.
மேலும், திமுக தலைவர் கருணாநிதி இந்துக்கள் என்றால் திருடன் என கூறி சர்ச்சைக்குள்ளானார்.
ஆனால், அவரது மகன் மு.க. ஸ்டாலினோ, திமுகவில் 90% இந்துக்கள் இருப்பதாகக் கூறி இந்துக்களின் ஆதரவு நிலைப்பாட்டில் இரட்டைவேடம் போடுகிறார் "என்று கூறியுள்ளார்.