பக்கங்கள்

பக்கங்கள்

13 அக்., 2015

யாழ். நீதிமன்ற முன் வீதி பாவனைக்குத் தடை

யாழ் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் முன் வீதியினை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாது என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன்
உத்தரவிட்டார்.

யாழ் நீதிமன்ற கட்டடத் தொகுதி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான பிணை மனு விண்ணப்பம் கடந்த 7ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இந்த வீதியினை 150 மீற்றர் வரை மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தமுடியாது எனவும் நீதிமன்ற பகுதியில் 200 மீற்றர் பகுதிக்குள் பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். 
இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்