பக்கங்கள்

பக்கங்கள்

9 அக்., 2015

தமிழ் அரசியற் கைதிகளின் பிரச்சினையை சட்டப்பிரச்சினையாகப் பார்க்க வேண்டாம் - த.தே.கூ

நேற்று வியாழக்கிழமை(08/10/2015) நாடாளுமன்றத்தில் அரசியற் கைதிகளின் பிரச்சினையை சட்டப்பிரச்சினையாகப் பார்க்க வேண்டாம்
என வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சகல தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியது.
மேலும் குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கரித்து கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினையை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் பேசியதாக தெரிவித்த அவர், அமைச்சு இதனைக் கவனத்திலெடுக்க வேண்டும் என்றார்.
அத்துடன் குற்றச்செயல் வரலாறு கொண்ட, வெளிநாடுகளில் வதியும் இலங்கையர்களை, நாட்டுக்கு கொண்டுவர புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க எண்ணும் நடவடிக்கைகளையிட்டு அவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நபரின் பெயரைக் கூறி, அவர் வெளிநாடு ஒன்றில் வாழ்வதாகவும் கூறினார்.
முன்னாள் அரசாங்கம் இவரைக் கைதுசெய்யத் தவறியதால் அவர்; வெளிநாட்டுக்குத் தப்பிப் போக முடிந்தது என சம்பந்தன் கூறினார்.