பக்கங்கள்

பக்கங்கள்

29 அக்., 2015

முன்னேற்ற அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை சமர்ப்பிக்கவுள்ளது


ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி தடையை நீக்கிக்கொள்ளும் வகையில் அரசாங்கம் உரிய நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை கையளிக்கவுள்ளதாக வெளியுறவு அமைச்சு  தெரிவித்துள்ளது. 
ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று அடுத்த மாதத்தில் இலங்கை வரும்போது இந்த முன்னேற்ற அறிக்கையை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சர்வதேச கடற்பரப்பில் இலங்கை உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று குற்றம் சுமத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கையில் இருந்து கடல் உணவுகளின் இறக்குமதிகளை தடைசெய்திருந்தது.
இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கண்டுக்கொள்ளும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியக்குழு எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை இலங்கைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் குறித்த குழுவின் பரிந்துரையின் கீழ் அடுத்த வருடம் அளவில் இலங்கையில் இருந்து கடலுணவு ஏற்றுமதி தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.