பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2015

ஜெனீவா யோசனை தொடர்பில் சர்வகட்சி மாநாடு: ஜனாதிபதி அறிவிப்பு


இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாட்டின் அரசியல் அமைப்பின்கீழ் உள்நாட்டு பொறிமுறையே தமது அரசாங்கத்தின் கொள்கை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் இன்று நாடு திரும்பிய ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விரைவில் சர்வகட்சி மாநாடு ஒன்றை அழைக்கவுள்ளதாகவும் அத்துடன் மதத்தலைவர்கள், புத்திஜீவிகளையும் அழைத்து ஜெனீவா யோசனை குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வன்முறையற்ற இணக்கமுள்ள கொள்கையின் அடிப்படையில் சர்வதேசத்தை இலங்கை வெற்றி கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.