பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2015

அதிமுக, திமுகவுடன் மக்கள்நலக் கூட்டியக்கம் கூட்டணி வைக்காது: வைகோ

திருவாரூரில் மக்கள்நலக் கூட்டியக்கத்தின் ஆலோசனைக்கு பின் மக்கள் நலக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளராக வைகோ செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது,

4 கட்சிகள் 8 பேர் குழு மூலம் குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அணுகுமுறை குறித்து சென்னையில் அக.23ல் மக்கள் நலக் கூட்டியக்கம் ஆலோசனை செய்யும், இறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கை நவம்பர் 2ல் வெளியீடப்படும், எனவும் குறைந்தபட்ச செயல் திட்டத்தை விளக்கி நவம்பர் 2ல் கோவையில் பொதுக்கூட்டம் நடக்கும் என்றார். 

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகளை கூட்டியக்கமாக செயல்படும். மேலும் அதிமுக, திமுகவுடன் மதிமுக உள்ளிட்ட 4 கட்சிகளும் கூட்டணி வைக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.