பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2015


தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினராக நடிகர் கமல் நியமிக்கப்பட உள்ளதாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். 

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக அச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், 

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினராக நடிகர் கமல் நியமிக்கப்பட உள்ளார். இதற்கு கமல் சம்மதம் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவில் இருந்து அறக்கட்டளைக்கு நியமிக்கப்படும் 3 பேரில் ஒருவராக அவர் இருப்பார் என்று விஷால் தெரிவித்துள்ளார்.