பக்கங்கள்

பக்கங்கள்

17 அக்., 2015

எலும்புக் கூடுகள் மீட்கப்பட்ட அரியாலைப் பகுதியில் பொலிசார் விசாரணை


யாழ். அரியாலை முள்ளி பகுதியில் நேற்றய தினம் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேற்படி பகுதியில் நேற்றய தினம் மாலை மனித எலும்பு எச்சங்கள் சில மீட்கப்பட்டிருந்த்து. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் இன்றைய தினம் காலை யாழ்.பொலிஸ் நிலையித்தில் சம்பவம் தொடர்பான தகவல்களை தெரிவித்ததுடன் சம்பவ இடத்தையும் பொலிஸாருடன் சென்று அடையாளப்படுத்தியிருந்தார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் மேலும் எலும்பு எச்சங்கள் உள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.