பக்கங்கள்

பக்கங்கள்

8 அக்., 2015

இன்றும் கோத்தபாய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்


ரக்னா லங்கா நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுகொள்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுகொள்வதற்காக கோத்தபாய உட்பட 09 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் இன்றைய தினம் 09 பேரும் வரவில்லை என்றாலும் கோத்தபாய ராஜபக்ச உட்பட சிலர் வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ரக்னா  லங்கா நிறுவனத்தின் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தையடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.