பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2015

தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்: பாண்டவர் அணி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நாசர், பொன்வண்ணன், விஷால் உள்பட பாண்டவர் அணியினர் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், வரும் 18ஆம் தேதி ஞாயிறு St.Ebbas மேல்நிலைப்பள்ளியில் நடக்க இருக்கும் தென் இந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க தேர்தல் அதிகாரியிடம் ஏற்கனவே ஒரு கடிதம் கொடுத்துள்ளோம். 

தற்போது உள்ள சூழலில், எந்தவித சிறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், அனைவரும் பயமின்றி வாக்களிக்கவும் உச்சக்கட்ட பாதுகாப்பையும், C.C.T.V. Camera-க்கள் நிறுவியும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எந்தவிதமான சிறு வன்முறையும் எங்களின் அணியால் நடக்காது என்பதையும், நியாயமான ஜனநாயக முறையில் அமைதியான தேர்த்ல் நடக்கவும் எங்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும் என்பதையும் இதன் மூலம் உறுதி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்