பக்கங்கள்

பக்கங்கள்

3 அக்., 2015

ஜெனிவா விவகாரத்தில் இலங்கை சர்வதேசத்திடம் மண்டியிடவில்லை : பிரதமர் ரணில்

ஜெனிவா விவகாரத்தில் சர்வதேசத்திடம் இலங்கை மண்டியிடவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


நாட்டு மக்களிடமே அடிபணிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மாநாட்டை அடுத்து சாதகமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த காலத்தில் இழக்கப்பட்ட ஜி.எஸ்.பி. வரிச்சலுகை மீளப் பெற்றுக்கொள்ளப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
இதேவேளை, காணாமல்போனார் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க விசேட ஆணைக்குழுவொன்று அமைக்கப்படும் என்றும், அதற்கேற்ப சட்ட அலுவலகம் ஒன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.