பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2015

அரசாங்கத்தினால் பல ஆயுதங்கள் தமிழ் அமைப்புக்களிடம் வழக்கப்பட்டுள்ளன!


யுத்ததின் போது பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய இராணுவத்தினரினால் ஆயிரக்கணக்கிலான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல தமிழ் அமைப்புக்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ் அமைப்புகள் குறித்த ஆயுதங்களை பயன்படுத்தி சிவில் உறுப்பினர்கள் பலரை கொலை செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்கள் இன்னமும் குறித்த அமைப்புகளிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ரவிராஜ் கொலை மற்றும் பிரகித் எக்னெலிகொட கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் மூலம் பல தகவல்களை வெளியிடுவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு ஆயத்தமாகியுள்ளது.
எக்னெலிகொடவை கடத்தி சென்று கொலை செய்த சம்பத்துடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ கரனல் ஒருவரே ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானிடம் ஒப்படைத்தவர் என தெரியவந்துள்ளது.
இராணுவத்தினரால் குறித்த கேணலுக்கு கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் பல முக்கியமான கடமைகள் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.