பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2015

தனியார் வகுப்புகளுக்கு எதிரான சட்டமூலம்

பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் நடைபெறும் காலப்பகுதிக்குள், தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதிக்கும் யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. 

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதே, தனியார் மேலதிக வகுப்புகள் நடத்தப்படுகின்றமை குறித்த முறைபாடுகள் கிடைத்துள்ளன.

இதனால் மாணவர்களின் பாடசாலை வரவு குறைவடைகிறது. 

இதனை தடுப்பதற்கான யோசனை விரைவில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் சட்ட மூலமாக சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.