பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2015

தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்: டக்ளஸ்


உண்மையைக் கண்டறிதல் மற்றும் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தலைவன் அல்ல நான்.
போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் வடக்கிலிருந்தே நான் அரசியல் நடத்தினேன்.
தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்ய நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.
போர் இடம்பெற்ற காலத்தில் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்கியிருந்தோம் என டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.