பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2015

உலக சாம்பியன்ஷிப்: சானியா மிர்ஸா - மார்டினா இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்


சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் மகளிர் டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில், சானியா மிர்ஸா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

உலகின் நம்பர் ஒன் இணையான சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில், சீன தைபேவின் யங்-ஜன் சான் ஜோடியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சானியா ஜோடி இணை, 6-4,  6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.